கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்காவது நபராக இன்று ஒருவர் உயிரிழந்தார்.

  Fayasa Fasil
By -
0


கேகாலை – ரங்வல பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கில்களை செலுத்தியவர்களை கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது
கண்டி நோக்கி சென்ற வேன் எதிர் திசையில் வந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள்  மீது மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மூன்றில் ஐவர் பயணித்துள்ளனர். பலத்த காயங்களுக்கு உள்ளான ஐவரையும் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் மற்றொரு நபர் உயரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நாங்கள்ளையை சேர்ந்த மொஹம்மத் அல்தாப் ஷாதுலி ஆவார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)