ரசிகர்களிடம் இருந்து பெற்ற ஆதரவிற்கு தனது மனமார்ந்த நன்றி - பானுக ராஜபக்‌ஷ

  Fayasa Fasil
By -
0

ரசிகர்களிடம் இருந்து பெற்ற ஆதரவிற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணத்தை வென்றதன் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை இலங்கை வந்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அணியில் உள்ள அனைவரும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாகவும் வெற்றிக்காக பெரும் சவால்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து வீரர்களும் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், உலகக் கிண்ணத்திற்கு இதுபோல் தொடர்ந்து விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)