புனித ஹஜ் கிரியையின் அறபா தின நேரடி அஞ்சல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவை சேவை அலைவரிசையில் எதிர்வரும் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 முதல் 4.00 மணி வரை ஒலிபரப்பாகவுள்ளது.
FM 102.1, FM 102.3 ஆகிய அலைவரிசைகளில் குறித்த நேரடி அஞ்சல் ஒலிபரப்பாகவுள்ளதுடன், நிகழ்ச்சியை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய ஆலோசனை சபை உறுப்பினருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் புனித மக்காவுடன் தொடர்பு கொண்டு நேரடி அஞ்சல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சேவை இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். (Siyane News)