ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க, எதிரணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன், அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
எனினும், இதில் ஜே.வி.பி பங்குபற்றியிருக்கவில்லை.