உயர்தர , புலமைப்பரிசில் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

  Fayasa Fasil
By -
0

உயர்தர, புலமைப் பரிசில் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் அறிவித்துள்ளார்.

இதற்கமைய 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கிடையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)