பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணிப்பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இன்று (07) அதிகாலை இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்.
பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் இராணுவத்தினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த கர்ப்பிணிப்பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.