உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அஷ்ஷெய்க் முஹம்மத் பின் அப்துல் அல் ஈஸாவினால் இந்த வருடத்திற்கான அரபா பேருரை நிகழ்த்தப்படவுள்ளது.
இதற்கான அனுமதியினை சவூதி அரேபிய மன்னர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 9ஆம் திகதி சனிக்கிழமையான அரபா தினத்தன்று மஸ்ஜிதுன் நமிராவினால் இருந்து உலக மக்களுக்கான இந்த பேருரை நிகழத்தப்படவுள்ளது.
பல மொழிகளுக்கு நேரடியாக மொழி மாற்றம் செய்யப்படும் இந்த பேருரை, முதற் தடவையாக இந்த வருடம் தமிழ் மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது.
நன்றி : விடியல்