நாளை நண்பகல் முதல் கடமைக்கு செல்லப்போவதில்லை : இலங்கை போக்குவரத்து சபை

  Fayasa Fasil
By -
0

தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், நாளை நண்பகல் முதல் கடமைக்கு செல்லப்போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளது.

அத்துடன், சேவை நிறைவடைந்து மீள வீடு திரும்பவும் முடியாத நிலை காணப்படுகிறது.

பல மாதங்களுக்கு முன்பே இந்த விடயம் தொடர்பில், அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டபோதிலும், எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

எனவே, இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், நாளை மதியம் 12 மணிமுதல் சேவைக்கு சமுகமளிக்கப்போலதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)