ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தனது கட்சியை சேர்ந்தவர் என கூறி ஒருவர் பெற்றோல் குண்டை தயார் செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இது அரசின் சதித் திட்டமா என்று உறுதியான சந்தேகம் உள்ளது என்றும் தெரிவித்தார்.