கட்டார் அறக்கட்டளை நிறுவனத்தை (qatar charity) பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலில் இருந்து அரசாங்கம் நீக்கியுள்ளது.

கட்டார் அறக்கட்டளை நிறுவனத்தை (qatar charity) பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலில் இருந்து அரசாங்கம் நீக்கியுள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் ஆகியோர் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு கட்டார் அரச அதிகாரிகளை சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி உதவி கோரியதைத் தொடர்ந்து கட்டார் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலில் இருந்து கட்டார் அறக்கட்டளை நிறுவனத்தை (qatar charity) நீக்கம் செய்துள்ளது என்பது விசேடமான விடயமாகும் .

2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கையில் மத்தியகிழக்கை மையமாக கொண்டு செயற்பட்ட நலன்புரி அமைப்புகள் மற்றும் அறக்கட்டளை நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்தால் பயங்கரவாதப் பட்டியலில் போட்டு தடைசெய்யப்பட்டதோடு விஷேடமாக கட்டார் அறக்கட்டளை நிறுவனமானது(qatar charity) அதிகம் பாதிக்கப்பட்டது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரோடு தொடர்பானவர்களுக்கு பயங்கரவாத செயல்கள் செய்ய அனுசரணை வழங்கியது என்று கட்டார் அறக்கட்டளை நிறுவனம் (qatat charity) தடைசெய்யப்பட்டதோடு அதன் கணக்குகளும் முடக்கப்பட்டு இதன் பல மில்லியன் ரூபாய்கள் பணம் அரச உடமையாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.



கருத்துகள்