பல கிலோமீற்றர் நடந்தே பாடசாலை செல்லும் ஆசிரியர்கள்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிராமப்புற ஆசிரியர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த மூன்று ஆசிரியர்களும் புத்தளத்திலிருந்து கொத்தாந்தீவு மு. ம. வித்தியாலயம் எனும் கிராமப்புற பாடசாலைக்கு சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவிலிருந்து தினம் மோட்டார் சைக்கிளில் 50 கி.மீ வந்து செல்ல நேர்கின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவர்கள் மங்களவெலியில் பேரூந்தில் வந்திறங்கி போக்குவரத்திண்மையால் சுமார் 3 கி.மீ நடந்தே பாடசாலை வந்தடைந்துள்ளனர் . இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தூர பிரதேசங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள்களை விநியோகிப்பதற்கான கூப்பன்கள் வழங்கப்பட்டிருந்தும் எரிபொருட்களை விநியோகிக்க சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மறுப்பதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்