எரிபொருள்களின் விலைகள் இன்று அதிகரிக்கின்றன!

 


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.

மேலும் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாக விலை திருத்தம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்