எரிவாயு கொள்வனவு ஒப்பந்தத்தில் லிட்ரோ நிறுவனம் கைச்சாத்து

நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம் 100,000 மெட்ரிக் தொன் LP எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டுள்ளது.

இவற்றின் மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். உலக வங்கி 70 மில்லியன் டொலர்கள் நிதியுதவி செய்துள்ள அதேவேளை , மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது.

இது நான்கு மாதங்களுக்கு நாட்டில் பகிர்ந்தளிக்கப் போதுமானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கையிருப்பில் 70% உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இவற்றில் 12.5 கிலோ எடையுள்ள 5 மில்லியன் சிலிண்டர்களும், 5 கிலோ எடையுள்ள 1 மில்லியன் சிலிண்டர்களும், 2.5 கிலோ எடையுள்ள 1 மில்லியன் சிலிண்டர்களும் தயாரிக்கலாம் என பிரதமர் அலுவலகம் மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 30% வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

லிட்ரோவினால் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பெறப்பட்ட 33,000 தொன் LPயின் மொத்த எரிவாயுகளும் ஜூலை முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்து உடனடியாக விநியோகத்தை ஆரம்பிக்கும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.


கருத்துகள்