இந்தியாவிடமிருந்து எரிபொருள் கப்பல்கள் ஜூலையில் வந்தடையும்

நாடு முகம் கொடுத்துள்ள பாரிய எருபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக வருகின்ற ஜூலை மாதத்தில் இரண்டு டீசல் கப்பல்களையும் இரண்டு பெற்றோல் கப்பல்களையும் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நான்கு எரிபொருள் கப்பல்களையும் இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இலங்கை – இந்திய அரசுகளுக்கிடையே இடம் பெற்றுள்ளதோடு இதில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரான மிலிந்த மொரகொட மற்றும் இந்தியாவின் கனிய எண்ணெய், இயற்கை எரிவாயு, வீடமைப்பு மற்றும் நாகரிக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்து கொண்டதாக இந்தியவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கனிய எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை முகம் கொடுத்துள்ள பாரிய சவால்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடிகள் தொடர்பில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட இந்தியாவின் கனிய எண்ணெய், இயற்கை எரிவாயு, வீடமைப்பு மற்றும் நாகரிக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.
நிலவும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் இலங்கையில் மின்வலு சக்தியின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒத்தாசைகள் வழங்குதல், இலங்கை மற்றும் இந்திய கனிய எண்ணெய்த் துறையில் ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் விரிவுபடுத்தும் செயற்திட்டங்கள் தொடர்பிலாகவும் தூதுவர் மற்றும் அமைச்சர் கலந்துரையாடியுள்ளதோடு, கனிய எண்ணெய், எண்ணெய், எரிவாயு மற்றும் அதனோடு தொடர்பான துறைகளிலும் இலங்கையோடு நீண்டகால தொடர்புகளை பேணிக்கொள்ளும் முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அரச தரப்பு தகவல்கள் வந்துள்ளது.


கருத்துகள்