உலமா சபையின் தலைமை பொறுப்பை தொடர றிஸ்வி முப்தி தீர்மானம்

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை கண்டி, கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற உலமா சபையின் பொதுக் கூட்டத்தில் றிஸ்வி முப்தி மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும், தலைமைப் பதவியில் இருப்பதா? இல்லையா? என்று இஸ்திகாரா செய்து தீர்மானிக்க உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவிடம் ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார்.

இவ்வாறான நிலையில் புதிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (26) கொழும்பில் கூடியது. இதன்போது இடம்பெற்ற பல்வேறு விதமான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து உலமா சபையின் தலைவர் பதவியினை தொடர றிஸ்வி முப்தி தீர்மானித்துள்ளார்.

Vidiyal 


கருத்துகள்