ஹஜ் கடமைக்காகச் செல்லும் 50 யாத்திரிகள் கொண்ட முதலாவது குழுவினர் இன்று அதிகாலை மக்கா நோக்கி பயணித்தது.

ஹஜ் கடமைக்காகச் செல்லும் 50 யாத்திரிகர்களைக் கொண்ட முதலாது குழுவிழனர் இன்று (28) அதிகாலை செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து மக்கா பயணமானாா்கள்.


சஊதி அரசு – நாடுகளுக்கிடையே பகிா்ந்தளிக்கும் ஹஜ் கோட்டாமுறையில்,  இலங்கைக்கு  இம்முறை 1,585 பேருக்கு ஹஜ் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.


இலங்கையில் தற்பொழுது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்படான சூழ்நிலையில், 960 பேர் இம்முறை ஹஜ் செல்வதற்காக முஸ்லிம் கலாசார தினைக்களத்தில் பதிவுசெய்திருந்தனர்.


கடந்த இரண்டு வருடங்கள் கொவிட் பிரச்சினை காரணமாக, இலங்கையிலிருந்து யாரும் ஹஜ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள்