"ஜனாதிபதி பதவி விலக வேண்டும்" என்ற பிரதான கோசத்துடன் பல்வேறு கோசங்களை முன்வைத்து இன்றைய தினம் (09) ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றியிருந்தனர். பங்குபற்றியிருந்த முஸ்லிம்களுக்கு நோன்பு துறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் கூட்டாக மஹ்ரிப் தொழுகையினையும் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)