மின்துண்டிப்பு நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் - பிரதமர் அதிரடி

Rihmy Hakeem
By -
0

 


திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைப்பதை கருத்திற்கொண்டு மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை இன்று (03) முதல் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ நேற்று (02) மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை குறைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி கௌரவ பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய இன்று (03) முதல் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி பிரதமரிடம் நம்பிக்கை வெளியிட்டார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)