சீன தூதரகத்தினால் ரமழான் காலத்திற்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Rihmy Hakeem
By -
0

 


இலங்கை - சீன இராஜதந்திர உறவுக்கு 65 வருடங்கள் பூர்த்தியாகுவதனை முன்னிட்டு, கொழும்பு சீன தூதரகத்தினால் எதிர்வரும் ரமழான் காலத்தில் கொழும்பு வாழ் முஸ்லிம் மக்களுக்குத் தேவையான 650 உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 30 ஆம் திகதி கொழும்பு 10 பிரதீபா மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக சீன தூதுவர் கலந்து கொண்டதுடன், நிகழ்வை ஏற்பாடு செய்த முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் ரூமி அமித், பொருளாளர் ஜவ்பர் ஹாஜி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான கலீலுர் ரஹ்மான் மற்றும் முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (Siyane News)








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)