லங்கா IOC நிறுவனம் சகலவிதமான டீசல்களின் விலைகளையும் 75 ரூபாவினாலும், பெற்றோலின் விலையினை 50 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 254 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 214 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)