பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் இன்னமும் சிக்கல் நிலவி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, உணவுப் பொருட்களின் விலையை எவ்வாறு நிர்ணயம் செய்வது என்பது குறித்து அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத தெரண