TNA ஏற்பாட்டில் நீர்கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கைக்கு சிங்கள மக்களும் ஆதரவு!

Rihmy Hakeem
By -
0

 பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை  நேற்றைய தினம் (25) நீர்கொழும்பு நகர பேருந்து நிலையத்துக்கு முன்பாக அனைத்து மக்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் நடைபெற்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இதற்கு மிகப்பாரியளவில் இதற்கு ஆதரவு கிடைத்திருந்தது. இந்தநிலையிலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் மற்றுமொறு கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் எனது தலைமையில் இடம்பெற்றிருந்த குறித்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கொண்டிருந்தனர். குறிப்பாக சிங்கள மக்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடி பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் கையொப்பமிட்டிருந்தனர்.

“இன்றைய நாள் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியான நாள். காரணம் சிங்கள மக்களும் அதிகளவில் ஒன்று கூடி பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி கையொப்பமிட்டுள்ளனர்.“







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)