ஒன்றரை வயதான GRAND MASTER ஆயிஷா பரீதாவின் பெயர் ஆசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு

Rihmy Hakeem
By -
0

 


பொலன்னறுவை மாவட்டம், சுங்காவில் பிரதேசத்தை சேர்ந்த இப்றாஹிம் ரம்ஷான், றிப்னா ஜுனைட் தம்பதிகளின் புதல்வி ஆயிஷா பரீதா ஆசிய சாதனை புத்தகத்தில் தன் பெயரையும் பதித்து "GRAND MASTER " எனும் மகுடத்தை சூடி ஊருக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

52 Fruits, 37 Animals, & Shapes  ஆகியவற்றின் பெயரில்லா Flash Cards களை பார்த்து அவைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் தெளிவாகவும், விரைவாகவும் சொல்லி இச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

கடந்த 2020.06.29ஆம் திகதி அன்று பிறந்த ஆயிஷா தனது ஒன்றரை வயதில் இச் சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது அத்துடன் இலங்கையின் அதிகுறைந்த வயதில் ஆசிய சாதனை புத்தகத்தில் முதலாவதாக  தனது பெயர் பதித்தவரும் இவரே...

வடமத்திய மாகணத்திற்கான ஆசிய சாதனை புத்தகத்தின் முதல் சாதனையாளரும் இவரே.. 

இவரின் சாதனையை உறுதிப்படுத்தி "ASIA BOOK OF RECORD" நிறுவனத்திலிருந்து சான்றிதழ், பதக்கம் மற்றும் ஏனைய நினைவுச் சின்னங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. 

ASIA BOOK OF RECORD நிறுவனத்திற்கு  எங்கள் நன்றியைத் தெரிவிப்பதோடு இச் சாதனையை நிகழ்த்த உறுதுணையாக இருந்த உறவுகளுக்கு ஆயிஷாவின் பெற்றோர் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் அவரது எதிர்காலம் சுபீட்சமிக்கதாக அமைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றனர். 







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)