மேல் மாகாணத்தில் சிக்கியிருப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Rihmy Hakeem
By -
0

ஊரடங்கு சட்டம் காரணமாக தமது வீடுகளுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த நபர்களை தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது.
முதலாவது கட்டமாக, களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள கர்ப்பிணி தாய்மார்கள், நீண்ட கால நோயாளர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட தரப்பினரை அவர்களது ஊர்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து நபர்களும் வைத்திய பரிசோதனையின் பின்னரே தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
அவர்களை அழைத்துச் செல்வதற்கு பொலிஸ் பாதுகாப்புடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)