VTA இனால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை - கொரிய தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0
கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் கொழும்பு, ஒருகொடவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை - கொரிய தொழிற்பயிற்சி நிறுவனத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (20) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தொழிற்பயிற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரவி ஜயவர்தன, கொரிய நாட்டு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)