ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் சுகாதார இராஜாங்க அமைச்சராக பைஸல் காசிம் அவர்களும் சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்தில் நியமனம் பெற்றனர், இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின் பிரதி தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆகியோரும் பிரசன்னம் ஆகி இருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு இம்முறை ஆரம்பக் கைத்தொழில் அமைச்சும் ஏற்கனவே இருந்த சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு இம்முறை ஆரம்பக் கைத்தொழில் அமைச்சும் ஏற்கனவே இருந்த சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.