"Back to Badriya - 2019" Inter Batch Premier League போட்டியில் 2009 (O/L) Batch அணி சம்பியன்

Rihmy Hakeem
By -
0
கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திக்காகவும் நலன்புரித்தேவைகளுக்காகவும் நிதியுதவி மற்றும் ஏனைய உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக வேண்டியும் பழைய மாணவர்களின் வகுப்பினரிடையே ஏற்பாடு செய்யப்பட்ட வகுப்பு ரீதியான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நான்கு நாட்களாக கஹட்டோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது.

சுமார் 27 வகுப்பு அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு 2009, 2013 சாதாரண தர வகுப்பு அணியினர் பல ஆட்டங்களில் வெற்றி பெற்று தகுதி பெற்றனர்.

இறுதிச்சுற்றில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2013 அணியினர் நியமிக்கப்பட்ட ஐந்து ஒவர்களில் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 81 ஆட்டங்களை பெற்றுக்கொண்டனர்.இதில் சிறப்பாக ரிம்ஸி மற்றும் ஸப்ரான் அணிக்கு கூடுதலான ஸிக்ஸர்களை விளாசி அணியின் மொத்த ஓட்டத்துக்கு வலுச்சேர்த்தனர்.

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய 2009 ஆம் ஆண்டின் வகுப்பு அணியினர் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 82 ஓட்ட இலக்கை மிகவும் அபாரமாக துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கைத்தாண்டினர். விசேடமாக ஸிமாம் அவர்கள் விலாசித்தள்ளிய ஆறு ஓட்டங்களின் பெருக்கத்தினால் வெற்றி இலக்கை அடைவதற்கு காரணமாக இருந்தது.

சுருங்க கூறின் இந்த ஆட்டத்தொடரில் 2013 ஆண்டைச்சேர்ந்த ரிம்ஸி அவர்களும் 2009ஆம் ஆண்டைச்சேர்ந்த ஸிமாம் அவர்களும் இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி போட்டித்தொடரிலும் இறுதிப்போட்டியிலும் பிரகாசித்ததை காணக்கூடியதாக இருந்தது.

போட்டித்தொடரில் மூன்றாவது இடத்தை 2002ஆம் ஆண்டு வகுப்பினர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகனாக ஸிமாம் தெரிவு செய்யப்பட்டதுடன் ஆட்டத்தொடர் நாயகனாகவும் ஸிமாம் தெரிவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
வெற்றி பெற்ற அணியினர் மற்றும் ரன்னர்ஸ் அப் (இரண்டாம் இடம்) அணியினர் வெற்றிக்களிப்பில் தங்களுக்கான வெற்றி பதாகைகளுடனும் கிண்ணங்களை பெற்றுக்கொள்வதையும் மற்றும் போட்டி நிகழ்வின் பல்வேறு கட்டங்களின் போதான காட்சிகளையும் படங்களில் காணலாம்.
Luthufullah - Kahatowita















கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)