பௌத்தத்தின் பாதுகாவலர்களிடமிருந்து பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் - சுமந்திரன்

Rihmy Hakeem
By -
0

பௌத்தத்தின் பாதுகாவலர்களிடமிருந்து பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘நாடாளுமன்றம், நீதிமன்றம், சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றில் பௌத்தம் தொடர்பாக சிந்திப்பவர்கள், பௌத்த மதத்தின் உயரிய சிந்தனைகள் கோட்பாடுகளை, பௌத்தத்தை பாதுகாப்பதாக சொல்லிக்கொள்பவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)