அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்க பெருந்திரளான மக்கள் காத்துநின்றனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டிந்த வேளை, அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.