சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவபீட அபிவிருத்திக்கு சவூதி நிதியுதவி

www.paewai.com
By -
0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை முழுமையான வசதிகளையுடைய மருத்துவபீடமாக நிறுவுவதற்கு நிதியுதவிகளை வழங்க சவூதி அரசாங்கம் முன்வந்துள்ளது. 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை முழுமையான கருவிகளைக் கொண்டதாக தரமுயர்த்துவதற்கு 187.5மில்லியன் சவூதி ரியால்களை சலுகைக் கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்க சவூதி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தலைமையில் சவூதிக்கு விஜயம் செய்துள்ள குழுவினர் சவூதி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்தையின் போது இவ் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.   

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)