850 ஆண்டு பழமையான பாரிஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் கேதட்ரல் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத் திகழ்ந்த இந்த பழமையான தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது பாரிஸ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.