கடந்த பெப்ரவரி 24 திகதி கஹடோவிட தீவானி வரவேற்பு மண்டபத்தில் கஹடோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற க.பொ.த. சாதாரண தரம் (95) மற்றும் க.பொ.த. உயர் தரம் (98) ஆகிய வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்பு உரையினை அஷ்ஷெய்க் ரிஸ்வான் ரஹீம் நளீமி நிகழ்த்தினார். அவர் தனதுரையில் இவ் ஒன்று கூடலின் நோக்கம் மற்றும் திட்டங்களை தெளிவு படுத்தினார். பின்னர் வகுப்பு தோழர்களுக்கிடையே புதிர் போட்டி நிகழ்ச்சிகளும், வருகை தந்த பிள்ளைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நாட்டின் பல தூரப் பிரதேசங்களிலிருந்தும் வகுப்புத் தோழர்கள் வந்து கலந்துகொண்டமை இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பமாகும்.
நீண்ட காலம் கணிதம் மற்றும் வகுப்பாசிரியர்களாகக் கடமையாற்றிய ஆசிரியர் ஜமால்தீன் மற்றும் ஆசிரியை அபீரா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆசிரியர் ஜமால்தீன் தமது உரையில் கடந்த கால பசுமையான நிகழ்வுகளை ஞாபகப்படுத்தினார்.
ஊர் மக்கள் தன்னை சிறப்பாக கௌரவ படுத்துவதையும் அதிலும் குறிப்பாக தனது 30 வருடத்திற்குமதிகமான ஆசிரியர் சேவையில் பல மாணவர்களை உருவாக்கியதாகவும் தனது இக்கட்டான சந்தர்ப்பங்களில் மாணவர்கள் தனக்கு உதவியதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
வருகை தந்த ஆசிரியை அபீரா அவர்களின் கணவரும் உடுகொட முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருமான கௌரவ ஹலீம் அவர்கள் உடுகொட மற்றும் கஹடோவிடவிற்கும் இடையிலான தொடர்பினை சிலாகித்துப் பேசினார்.
பின்னர் வகுப்புத் தோழர்கள் சார்பில் புத்தளம் Mersi கல்லூரி ஆசிரியை mafaza கடந்த கால பசுமையான நிகழ்வுகளை சுவாரஸ்யமான முறையில் குறிப்பிட்டதுடன் வருகை தந்திருந்த தோழர்களின் பிள்ளைகளுக்கு அறிவுரைகளையும் வழங்கினார். ஆசிரியர் ஜமால்தீன் மற்றும் ஆசிரியை அபீரா ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியில் ஆசிரியை நூர் ஸைஹாவின் நன்றியுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.
(அஜ்மல் - கஹட்டோவிட்ட)